உள்நாடு

தொலைபேசி மற்றும் டேட்டா கட்டணங்களின் விலை தொடர்பில் வெளியான தகவல் !

(UTV | கொழும்பு) –     தொலைப்பேசி மற்றும் இணைய வழி (data) கட்டணங்களுக்கு ஓரளவு நிவாரணம் வழங்குவது தொடர்பில் அரசாங்கத்தின் கவனம் செலுத்தப்பட வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற வரவு செலவுத்திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அதன்படி இக் கட்டணங்களின் அதிகரிப்பு மக்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர்,

“இன்று, பலர் டிவி பார்க்கிறார்கள், இசை கேட்கிறார்கள், சமூக ஊடகங்களைப் பயன்படுத்துகிறார்கள் மற்றும் பெரும்பாலும் மொபைல் போன்கள் மற்றும் டேட்டா மூலம் கல்வியைப் பெறுகிறார்கள். சமீப காலங்களில் மொபைல் போன் கட்டணமும் டேட்டா கட்டணமும் வெகுவாக உயர்ந்துள்ளது. இதனால், செல்போன் மூலம் சமூக வலைதளங்களை பயன்படுத்துவோர் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.” என குறிப்பிட்டார்.

எனவே கையடக்கத் தொலைபேசிக் கட்டணங்கள் மற்றும் தரவுக் கட்டணங்களுக்குச் சற்று நிவாரணம் வழங்குவதற்கு அரசாங்கத்தின் கவனத்தை செலுத்துமாறு அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

Related posts

கடந்த 24 மணித்தியாலத்தில் 7 கொரோனா மரணங்கள்

உயர்தரப் பரீட்சையை எதிர்வரும் நவம்பர் மாதம் நடத்துவதற்கு திட்டம்!

காலிமுகத்திட ஆர்ப்பாட்டக்காரர்கள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித்தை சந்தித்தனர்