உள்நாடு

மதுவரித் திணைக்களத்தின் வருமானத்தில் ஏற்றம்

(UTV | கொழும்பு) –     மதுவரித் திணைக்களத்தின் வருமானம் ஏற்றம் கண்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

அதன்படி, 2021 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில், ஆண்டின் முதல் 10 மாதங்களில், வருமானம் 20 வீதத்தால் அதிகரித்துள்ளது.

இது குறித்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர், மதுபான போத்தல்களுக்கு பாதுகாப்பு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டதை அடுத்து வருமானம் இவ்வாறு அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

ஜனவரி 3ஆம் திகதி முதல் நாட்டில் உரிமம் பெற்ற மதுபான உற்பத்தி நிலையங்களுக்கு பாதுகாப்பு ஸ்டிக்கர்களை ஒட்டுவது அல்லது மதுபான போத்தல்கள் மற்றும் கேன்களில் டிஜிட்டல் பாதுகாப்பு முத்திரைகள் ஒட்டும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மதுவரித் திணைக்கள ஊடகப் பேச்சாளர் கபில குமாரசிங்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஜனவரி 1 ஆம் திகதி முதல் சந்தையில் உள்ள அனைத்து மதுபான போத்தல்கள் மற்றும் கேன்களில் ஸ்டிக்கர் ஒட்டுவதற்கு சட்ட விதிகளுக்கு மூன்று மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும் மதுபானங்கள் மீது விதிக்கப்படும் வரிகளை அரசாங்கம் எவ்வித முரண்பாடுகளும் இன்றி வசூலிக்க முடியும் என்பதை உறுதிப்படுத்துவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் எனவும் தெரிவித்தார்.

Related posts

பாராளுமன்ற தேர்தலின் பின் கட்சியில் மாற்றம் – நாமல்

editor

நாட்டு மக்களுக்காக ஜனாதிபதியின் மேலும் பல நிவாரண உதவிகள்

QR குறியீட்டு முறையை நிறுத்துவது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை