விளையாட்டு

சாமிக்க கருணாரத்ன இனி விளையாடுவதற்கு தடை!

(UTV | கொழும்பு) –     சமீபத்தில் நடந்து முடிந்த ஐசிசி டி20 உலகக் கோப்பையின் போது வீரர்கள் ஒப்பந்தத்தில் உள்ள பல விதிகளை மீறிய முறைகேடுகள் தொடர்பாக மூவரடங்கிய விசாரணைக் குழு நடத்திய ஒழுக்காற்று விசாரணையில் இலங்கை கிரிக்கெட் வீரர் சாமிக்க கருணாரத்ன தனக்கு எதிராக சுமத்தப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளையும் ஒப்புக்கொண்டார்.

 

இந்த சம்பவம் தொடர்பான குற்றத்தை சாமிக்க கருணாரத்ன ஏற்றுக்கொண்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதன்படி, சாமிக்க கருணாரத்னவுக்கு இலங்கை கிரிக்கெட் நிறுவனம் ஒத்திவைக்கப்பட்ட ஓராண்டு போட்டித் தடையொன்றை விதித்துள்ளது.

 

இதேவேளை, போட்டித் தடைக்கு மேலதிகமாக, சாமிக்க கருணாரத்னவுக்கு 5,000 அமெரிக்க டொலர் அபராதம் விதிக்கவும் இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தீர்மானித்துள்ளது.

இதேவேளை, குறித்த வீரரின் பெயர் இலங்கை கிரிக்கெட் குழாமில் இடம்பெறாமை குறித்து கிரிக்கெட் தேர்வுக் குழு அதிகாரிகளிடம் அறிக்கை ஒன்றை கோருமாறு அமைச்சின் அதிகாரிகளுக்கு விளையாட்டுத் துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க பணிப்புரை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

Related posts

ஆசிய கிண்ண போட்டிகள் இரத்து

இரண்டாவது இருபதுக்கு -20 கிரிக்கெட் போட்டி இன்று

கிரிக்கெட் வரலாற்றில் 43 ஊழல்கள் – குமார் சங்கக்கார