(UTV | கொழும்பு) – அரசாங்க அச்சக திணைக்கள ஊழியர்கள் ஆரம்பித்துள்ள பணிப்புறக்கணிப்பை தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானித்துள்ளனர்.
இதன் படி, மேலதிக நேர கொடுப்பனவு வழங்குவதில் ஏற்பட்ட பிரச்சினையை முன்வைத்து அரச அச்சக அலுவலக ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருந்தனர்.
அரசு அச்சக ஊழியர் சங்கத்தின் கூற்றுப்படி, தங்கள் புகார்களுக்கு தீர்வு காணும் பணிப்புறக்கணிப்பு தொடருமெனவும் இந்த பணிப்புறக்கணிப்பு நடவடிக்கையின் எதிர்கால அழுத்தங்கள் அரசாங்கத்தின் அச்சு நடவடிக்கைகளுக்கு பெரும் அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடும் எனவும் அச் சங்கத்தின் செயலாளர் அசங்க சந்தருவன் சுட்டிக்காட்டியிருந்தார்.
எனினும் தற்போது அரசாங்க அச்சக திணைக்கள ஊழியர்கள் ஆரம்பித்துள்ள பணிப்புறக்கணிப்பை தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானித்துள்ளதாக அரசாங்க அச்சக திணைக்கள தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.