உள்நாடுசூடான செய்திகள் 1

வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று! ரணில் வெல்வாரா?

(UTV | கொழும்பு) –

2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு இன்று (22) நடைபெறவுள்ளது.

வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று மாலை 5 மணிக்கு இடம்பெறவுள்ளதாக பாராளுமன்ற தகவல் தொடர்பு திணைக்களம் தெரிவித்துள்ளது. அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் கடந்த 14 ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நிதி அமைச்சராக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

இதன்படி, வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் நவம்பர் 15 ஆம் திகதி ஆரம்பமானதுடன், இன்று விவாதம் நடத்தப்பட்டு விவாதத்தின் பின்னர் வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது. வரவு செலவுத் திட்ட குழு வாய்ப்பு விவாதம் நாளை (23) முதல் டிசம்பர் 8 ஆம் திகதி வரை 13 நாட்களுக்கு நடைபெறவுள்ளதுடன், அன்றைய தினம் மாலை 5 மணிக்கு மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

சீன ஆராய்ச்சி கப்பல் இலங்கை வருவதற்கு அனுமதி – வெளிவிவகார அமைச்சர்.

வாழைத்தோட்டம் துப்பாக்கி சூட்டு சம்பவம்- ரய்னா கைது

பெருந்தோட்ட மக்களை சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்களாக பலப்படுத்துங்கள் – சஜித்