(UTV | கொழும்பு) – முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ சற்றுமுன் இலங்கை நாட்டை வந்தடைந்தார்.
முன்னாள் அமைச்சரை ஏற்றிச் சென்ற EK-650 விமானம் சற்று நேரத்திற்கு முன்னர் (20) காலை 8.30 மணியளவில் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
டுபாயிலிருந்து நாட்டிற்கு வந்த பசில் ராஜபக்ச, நெருக்கடி நிலை உருவாகியுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடி, எதிர்வரும் அரசியல் முன்னெடுப்புகளுக்காக தனது கட்சியை பலப்படுத்தவுள்ளதாக தெரியவருகிறது .
பசில் ராஜபக்சவை வரவேற்க பொதுஜன ஐக்கிய பெரமுனவின் அமைச்சர்கள் பெருமளவானோர் கட்டுநாயக்க விமான நிலையத்தின் விசேட விருந்தினர் அறைக்கு வருகை தந்திருந்தனர்.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්