உள்நாடு

வேலைவாய்ப்புக்காக விசிட் விசாவில் அபுதாபி சென்ற 17 இலங்கையர்கள்

(UTV | கொழும்பு) –    அண்மையில் ஊடகங்களில் வெளியான வெளிநாட்டு வேலை வாய்ப்பை பெற்றுக்கொள்ளும் நோக்கில் விசிட் விசாவில் அபுதாபிக்கு சென்றஇலங்கை பிரஜைகள் 17 பேர் பற்றிய செய்தி குறித்து அபுதாபியில் உள்ள இலங்கை தூதரகம் கருத்து வெளியிட்டுள்ளது.

அதன் படி இவர்கள் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பொலிசார் மற்றும் தூதரக பிரதிநிதிகளால் கண்டுப்பிடிக்கப்பட்டு, இது தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதேவேளை குறித்த இலங்கையர்களின் ஒருவர் மீண்டும் நாட்டிற்கு திரும்ப ஒப்புக்கொண்டதையடுத்து தூதரகம் அந்த நபரை திருப்பி அனுப்பியுள்ளது.

கடந்த நவம்பர் 15, 2022 அன்று, சரியான சட்ட மற்றும் குடியேற்ற நடைமுறைகளை கடைபிடிக்க தூதரகத்தின் அறிவுறுத்தல்கள் இருந்தபோதிலும் மற்றவர்கள் ஓமனுக்கு புறப்பட்டுச் சென்றதும் இதன் போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது
எனினும் மேற்கூறிய அதிகாரிகளால் இந்த 17 பேர் பற்றிய விசாரணையின் எந்த வித பிரச்சினைகளோ புகார்களோ இல்லையென தெரியவந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 660

மேலும் 12 பேர் பூரண குணம்

முடக்கப்பட்டுள்ள பிரதேச மக்களுக்கான அறிவித்தல்