உள்நாடுசூடான செய்திகள் 1

“திலினியுடன் நெருங்கிய தொடர்பிலிருந்த மஹிந்த” பகீர் தகவல்

(UTV | கொழும்பு) –

கொழும்பில் பாரிய நிதி மோசடியில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திலினி பிரியமாலியுடன் தொடர்பில் இருந்த பல சக்தி வாய்ந்த அரசியல்வாதிகள் தொடர்பில் முன்னாள் விமானப்படை அதிகாரி கீர்த்தி ரத்நாயக்க தகவல் வெளியிட்டுள்ளார்.

இணைய சேனலொன்றில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும், ரோஹித அபேகுணவர்தனவும் திலினி பிரியமாலியுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்ததாகவும், ஒரு முறை அவரை தேசியப்பட்டியல் ஊடாக நாடாளுமன்றத்திற்கு கொண்டுவர முயற்சித்ததாகவும் கீர்த்தி ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான நிதி மோசடி மற்றும் சம்பவத்துடன் தொடர்புடையவர்களுக்கிடையிலான பல பரிவர்த்தனைகளை அவர் வெளிப்படுத்திய நிலையில், தான் கூறும் அனைத்து விடயங்களுக்கும் தாம் பொறுப்பு என்றும், யாரேனும் பாரபட்சம் காட்டினால், அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறும் அவர் தெரிவித்துள்ளார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 76 ஆக உயர்வு

மைத்திரி ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜர்

வடகாசாவிலிருந்து வெளியேறவும் : 3மணி நேர காலக்கெடு கொடுத்த இஸ்ரேல்