உலகம்

இஸ்தான்புல் நகரை பதம்பார்த்த குண்டுத்தாக்குதல்

(UTV |  இஸ்தான்புல்) – துருக்கியின் மிகப்பெரிய நகரமான இஸ்தான்புல் நகரின் மையப்பகுதியில் நேற்று சக்திவாய்ந்த குண்டு வெடித்தது.

சுற்றுலா பயணிகள், உள்ளூர் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இஸ்திக்லால் கடை வீதியில் இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இதில் அப்பகுதியில் நின்றிருந்த மக்கள் தூக்கி வீசப்பட்டனர். குண்டுவெடிப்பு சத்தம் கேட்டதும் மக்கள் பயத்தில் நாலாபுறமும் சிதறி ஓடினர்.

இதனால் அந்த இடமே போர்க்களம்போல் காட்சியளித்தது. குண்டுவெடிப்பு குறித்து தகவல் அறிந்த போலீசார் மற்றும் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். இந்த குண்டுவெடிப்பில் 6 பேர் இறந்ததாகவும், மேலும் சிலர் காயமடைந்திருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

2015-2016 காலகட்டத்தில் துருக்கியை குறி வைத்து ஐஎஸ் பயங்கரவாத அமைப்பால் நடத்தப்பட்ட தொடர் தாக்குதல்களின் போது இஸ்திக்லால் அவென்யூ கடுமையாக பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related posts

பின்லாந்தில் பரவியது கொரோனா வைரஸ்

கொரோனா : உலகளவில் குணமடைந்தோர் எண்ணிக்கை 6 இலட்சத்தை தாண்டியது

ஒமிக்ரான் வைரஸ் சவுதி அரேபியாவில் அடையாளம்