உள்நாடு

வரவு செலவுத் திட்டம் இன்று

(UTV | கொழும்பு) –   2023ஆம் நிதியாண்டுக்கான வரவு செலவுத் திட்டம் இன்று (14) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

நிதியமைச்சராக உள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் குறித்த வரவு செலவுத்திட்டம் முன்வைக்கப்படவுள்ளது.

வரவு செலவுத் திட்ட உரை சமர்ப்பிப்பின் போது இராஜதந்திர பார்வையாளர்களுக்கு மாத்திரம் பாராளுமன்றத்தின் பொதுக் காட்சியகம் மட்டுப்படுத்தப்படும் என நாடாளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வரவு செலவுத் திட்டம் முடிந்ததும், வரும் 15ம் திகதி முதல் 22ம் திகதி வரை ஒரு வாரத்துக்கு வரவு செலவுத் திட்ட விவாதம் நடைபெறும்.

Related posts

வழமைக்கு திரும்பும் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் பணிகள்

தேசியக் கொடியை ஒரு வாரத்திற்கு பறக்க விடுமாறு கோரிக்கை

பாராளுமன்ற உறுப்பினராக கருணாரத்ன பரணவிதான பதவிப் பிரமாணம்

editor