உள்நாடு

பலத்த காற்று மற்றும் மின்னல் அபாயம்

(UTV | கொழும்பு) – இலங்கையின் தென் கிழக்கில் வளிமண்டலத்தின் கீழ் வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள கொந்தளிப்பு மேலும் உருவாகலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனால், நாட்டின் பல பகுதிகளில் மழைவீழ்ச்சி மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

கிழக்கு, ஊவா, வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தீவின் ஏனைய பகுதிகளில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

கிழக்கு, ஊவா, சப்ரகமுவ, மத்திய மற்றும் தென் மாகாணங்களில் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்.

இடியுடன் கூடிய மழையுடன் கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

Related posts

இன்றும் நேர அட்டவணைக்கு ஏற்ப மின்வெட்டு

மைத்திரியின் மேன்முறையீட்டு மனுவை விசாரிக்க கோரிக்கை

இன்று நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பு