உள்நாடு

வரிகள் குறித்து நிதி இராஜாங்க அமைச்சரின் அறிவிப்பு

(UTV | கொழும்பு) – 2022 ஆம் ஆண்டு வரி இலக்கான 915 பில்லியன் ரூபாவில் 68.4% இதுவரை எட்டப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

நாட்டின் வரி வருமானத்தின் உண்மை நிலை குறித்த விரிவான அறிக்கையை விரைவில் மக்களிடம் சமர்ப்பிக்கத் தயார் என ரஞ்சித் சியம்பலாபிட்டிய விடுத்துள்ள அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை சுங்கம், உள்நாட்டு இறைவரித் திணைக்களம் மற்றும் கலால் திணைக்களம் இணைந்து தயாரிக்கும் அறிக்கையின் இறுதிக் கலந்துரையாடல் இன்று (03) இடம்பெறவுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

வரி பற்றி விவாதிப்பது சிலருக்கு சலிப்பாக இருந்தாலும், இந்த நேரத்தில் வரி பற்றி பேசாமல் இருந்தால், வேறு எந்த தலைப்பையும் விவாதிக்க முடியாத நிலையை நாடு அடையும் என அமைச்சர் குறிப்பிட்டார்.

Related posts

எரிபொருள் விலைகளில் மாற்றம் இல்லை

இன்று முதல் மூன்று நாட்களுக்கு வான் சாகச கண்காட்சி

அசங்க அபேகுணசேகர கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது.