உள்நாடு

கொழும்பில் இரட்டிப்பாகும் டெங்கு நோயாளிகள்

(UTV | கொழும்பு) – தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின்படி, 21 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் டெங்கு அபாய வலயங்களாக நியமிக்கப்பட்டுள்ளன.

அதிக ஆபத்துள்ள வைத்திய அதிகாரி பிரிவுகளில் 9 பிரிவுகளில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக அந்த பிரிவு அறிவித்துள்ளது.

பிலியந்தலை, ஹரிஸ்பத்துவ, உக்குவெல, பதுளை, கேகாலை மற்றும் மாவனெல்ல சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் புதிதாக இனங்காணப்பட்டுள்ள அதிக ஆபத்துள்ள பிரதேசங்களாகும்.

இவ்வருடத்தின் 43ஆவது வாரத்தில் கொழும்பு மாவட்டத்தில் அதிகூடிய டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதோடு, 143 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த வருடம் இந்த காலப்பகுதியில் கொழும்பு மாவட்டத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 7,296 ஆக இருந்த போதிலும், இந்த வருடம் அது 14,937 ஆக அதிகரித்துள்ளது.

இது 7,641 நோயாளிகளின் அதிகரிப்பு ஆகும்.

இந்த வருடத்தில் இதுவரை நாட்டில் பதிவாகியுள்ள மொத்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 62,435 எனவும், இது கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் 40,248 பேர் அதிகரித்துள்ளதாகவும் தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

Related posts

கல்வியியல் கல்லூரிகளுக்கு நிரந்தர பீடாதிபதிகளை நியமிக்க தீர்மானம்

பரீட்சைகள் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு!

நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் இன்று