உள்நாடு

சேமினியிடம் CID வாக்குமூலம்

(UTV | கொழும்பு) – பாரிய நிதி மோசடியில் ஈடுபட்டு தற்போது (31) விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திலினி பிரியமாலியின் வழக்கு தொடர்பாக பிரபல சினிமா மற்றும் தொலைக்காட்சி நடிகை சேமினி இத்தமல்கொடவிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு வருமாறு அவருக்கு விடுக்கப்பட்ட அறிவித்தலின் பிரகாரம் இது குறிப்பிடப்பட்டுள்ளது.

குற்றப் புலனாய்வுப் பிரிவினர் சேமினி இத்தமல்கொடவிடம் சுமார் 04 மணிநேரம் விசாரணை நடத்தி வாக்குமூலங்களைப் பதிவு செய்தனர்.

அவர் வாக்குமூலம் வழங்குவதற்காக தனது கணவருடன் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு வந்துள்ளார்.

விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவின் பிரதான பொலிஸ் பரிசோதகர் ஜயந்த பயாகல உள்ளிட்ட அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தி வாக்குமூலங்களைப் பெற்றுள்ளனர்.

மேலும் திலினி பிரியாமலியுடன் திரைப்பட நடிகையின் நெருங்கிய தொடர்பு, அவருக்கு திலினி கொடுத்த பணத்தின் தொகை மற்றும் ஒலிநாடாக்கள் குறித்தும் இரகசிய பொலிஸ் அதிகாரிகள் கேட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விசாரணையின் போது திலினியுடன் நடந்த ஒப்பந்தங்கள் மற்றும் ஆடியோ பதிவுகளை அவர் மறுத்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

ஈஸ்டர் தாக்குதல் பிரதான சூத்திரதாரி யார்? 

அரசின் தோல்வி ஒவ்வொரு வினாடியிலும் உறுதியாகிறது

போதியளவு ஓட்டோ டீசல் கையிருப்பில்