(UTV | கொழும்பு) – இலங்கையின் கடனாளிகளுக்கும் சர்வதேச நாணய நிதியத்திற்கும் இடையிலான மற்றுமொரு முக்கிய கலந்துரையாடல் எதிர்வரும் நவம்பர் மாதம் 3ஆம் திகதி நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான புதிய வதிவிடப் பிரதிநிதி சர்வத் ஜஹான், முன்னாள் வதிவிடப் பிரதிநிதி துபாகாஸ் மற்றும் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிமனைத் தலைவருமான சாகல ரத்நாயக்க ஆகியோருக்கிடையில் இடம்பெற்ற சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் நவம்பர் மாதம் 3ஆம் திகதி இலங்கையின் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் நீண்ட கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த கலந்துரையாடலில் கவனத்திற்கு கொண்டு வரப்பட்ட விடயங்கள் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு அறிவித்து அதற்குரிய பதிலை உடனடியாக அவருக்கு அறிவிக்க எதிர்பார்த்துள்ளதாக சாகல ரத்நாயக்க உரிய அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.