(UTV | கொழும்பு) – எதிர்வரும் டிசம்பர் மாதம் வரை குத்தகை தவணை செலுத்துவதற்கு கால அவகாசம் வழங்கப்படாவிட்டால் எதிர்வரும் 25ஆம் திகதிக்கு பின்னர் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக பேருந்து தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றன.
கொழும்பில் இன்று (19) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அகில இலங்கை தனியார் பேருந்து நிறுவனங்கள் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் அஞ்சன பிரியஞ்சித் இதனைத் தெரிவித்தார்.