உள்நாடு

மருத்துவர்களின் ஓய்வு வயது ஓராண்டு நீட்டிக்கப்படுகிறது

(UTV | கொழும்பு) –   ஓய்வுபெற்ற மருத்துவர்களின் சேவைக் காலத்தை மேலும் ஒரு வருடத்திற்கு நீடிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

மேலும், 63 வயது நிறைவடைந்த மருத்துவர்களுக்கு மட்டுமே டிசம்பர் 31ஆம் திகதி முதல் ஓய்வு அளிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

62 வயதை பூர்த்தி செய்தவர்களின் சேவைக் காலம் மேலும் ஒரு வருடத்திற்கு நீடிக்கப்படும் எனவும் அவர்கள் 63 வயதில் கட்டாய ஓய்வு பெறுவார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், 61 வயதை பூர்த்தி செய்யும் மருத்துவர்களுக்கு 62 வயதும், 60 வயதை பூர்த்தி செய்த மருத்துவர்களுக்கு 61 வயதும், 59 வயது பூர்த்தியானவர்களுக்கு 60 வயதுமாக ஓய்வு பெறும் வயதும் ஒரு வருடத்தால் திருத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் வலியுறுத்தினார்.

ஓராண்டில் பணி நீட்டிப்பு முடிவடையும் என்றும், அதன்பிறகு அரசு முடிவு செய்த ஓய்வூதிய வயது நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார். சுகாதார சேவையில் ஏற்படக்கூடிய பிரச்சினைகளை ஆராய்ந்து பரிந்துரைகளை வழங்குவதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சு உபகுழுவின் அறிக்கையின் பிரகாரம் இந்த திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டதாக நேற்று (18) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் தெரிவித்தார்.

Related posts

மாலைத்தீவு ஜனாதிபதிக்கு கொரோனா

அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய கொள்கலன்கள் திங்களன்று விடுவிப்பு

மற்றுமொரு பொலிஸ் பிரிவிற்கும் ஊரடங்கு