(UTV | வாஷிங்டன்) – தற்போதைய கடன் நெருக்கடியை சமாளிக்க இலங்கைக்கு முழுமையான ஆதரவை வழங்குவதாக 22 கடன் வழங்கும் நாடுகளின் குழுவான பரிஸ் கிளப் உறுதியளித்துள்ளது.
வாஷிங்டனில் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்கவை சந்தித்த போது பரிஸ் கழகத்தின் இணைத் தலைவர் வில்லியம் ரூஸ் இந்த உறுதிமொழியை வழங்கினார்.
பாரிஸ் கிளப்பின் இணைத் தலைவர் வில்லியம் ரூஸ், இலங்கையின் கடன் நெருக்கடிக்கு விரைவான தீர்வைக் காண்பதற்கான இலங்கையின் தற்போதைய முயற்சிகளுக்கு பரிஸ் கிளப்பின் பூரண ஆதரவை உறுதியளித்ததாக இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார்.
இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தற்போது வாஷிங்டனில் சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் வருடாந்தக் கூட்டங்களில் கலந்துகொள்ளும் இலங்கைப் பிரதிநிதிகளுக்குத் தலைமை தாங்கியுள்ளார்.
இலங்கையின் கடன் மறுசீரமைப்பு செயல்முறையை நெருக்கமாக ஒருங்கிணைக்க பாரிஸ் கிளப் சீனா மற்றும் இந்தியாவை அணுகியுள்ளது.