விளையாட்டு

டி20 உலகக் கிண்ணம் : 3 விக்கெட் வித்தியாசத்தில் UAE வீழ்ந்தது

(UTV |  மெல்போர்ன்) – எட்டாவது டி20 உலகக் கிண்ண தொடர் ஆஸ்திரேலியாவில் நேற்று தொடங்கியது. தகுதிச் சுற்றுப்போட்டியின் இரண்டாவது ஆட்டத்தில் நெதர்லாந்து, ஐக்கிய அரபு அமீரகம் அணிகள் மோதின.

இதில் நாணய சுழற்சியில் வென்ற ஐக்கிய அரபு அமீரக அணி துடுப்பாட்டத்தினை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய முஹம்மது வசீம், சிராக் சுரி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். வசீம் அதிகபட்சமான 41 ரன்களையும், சுரி 12 ரன்களையும் குவித்தார். 7வது ஓவரில் முதல் விக்கெட்டை பறிகொடுத்த அந்த அணிக்கு காஷிஃப் தாவூத், விர்தியா அரவிந்த் சற்று ஆறுதல் அளித்தது. குறிப்பாக 18வது ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து 103 ரன்களை சேர்ந்திருந்த ஐக்கிய அரபு அமீரகம், 19-வது ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 106 ரன்களை மட்டுமே சேர்ந்ததது.

இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் அந்த அணி 8 விக்கெட்டுகளை இழந்து 111 ரன்களை மட்டுமே சேர்த்தது. நெதர்லாந்து அணி தரப்பில் அதிகபட்சமாக பாஸ் தி லீடே 3 விக்கெட்டுகளையும், ஃபிரட் க்ளாஸன் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதைதொடர்ந்து 112 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நெதர்லாந்து அணி களமிறங்கியது. தொடக்க வீரர் விக்ரம்ஜித் சிங் 10 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

அவரை தொடர்ந்து மற்றொரு தொடக்க வீரர் மேக்ஸ் 23 ரன்களில் ஆட்டமிழக்க நெதர்லாந்து அணி 41 ரன்களுக்கு 2 விக்கெட்களை இழந்தது. பின்னர் களமிறங்கிய நெதர்லாந்து வீரர்கள் பாஸ் தி லீடே (14 ரன்கள்) கோலின் அக்கர்மன் (17 ரன்கள்) டாம் கூப்பர் (8 ரன்கள்) அடுத்தடுத்து விக்கெட்களை பறிகொடுத்தனர்.

Related posts

டெல்லி கெப்பிட்டல்சை எதிர்க்கொண்டு வெற்றியை ருசித்த சென்னை சூப்பர் கிங்ஸ்

வெளிநாட்டு பயிற்சியாளர்களை நீக்க தீர்மானம்

உலக கிண்ண கால்பந்து முடிவுகளை கணிக்க இருக்கும் பூனை