உள்நாடு

நாட்டில் தொடர்ந்தும் கனமழை

(UTV | கொழும்பு) – நாட்டைச் சுற்றிலும் பலத்த மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். அந்த அறிவிப்பின்படி, மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லிமீற்றர் அளவில் பலத்த மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

தீவின் ஏனைய பகுதிகளில் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

சில இடங்களில் 75 மி.மீட்டர் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

இடியுடன் கூடிய மழையுடன் கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னலினால் ஏற்படக்கூடிய ஆபத்தை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு மக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Related posts

மீண்டும் நாடு திரும்பிய 223 இலங்கையர்கள்!

நாட்டில் மூடப்படும் மதுபானசாலைகள்!

ஒருவருக்கொருவர் விமர்சனங்களை முன்வைத்துக்கொண்டிருந்தால் எந்த பிரச்சினைகளுக்கும் தீர்வு காணமுடியாது – நாமல் எம்.பி

editor