உள்நாடு

மழையுடனான காலநிலை எதிர்வரும் புதன் வரை நீடிக்கும்

(UTV | கொழும்பு) –  நாட்டின் தென்மேற்குப் பகுதியில் தற்போது நிலவும் மழையுடனான காலநிலை எதிர்வரும் 19ஆம் திகதி புதன்கிழமை வரை நீடிக்கும் என வளிமண்டலவியல் பணிப்பாளர் நாயகம் அதுல கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் சிறு வெள்ளப்பெருக்கு ஏற்படுவதுடன் மண்சரிவு ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.

புத்தளம், குருநாகல், மாத்தளை, கம்பஹா, கண்டி, கேகாலை, நுவரெலியா, கொழும்பு, களுத்துறை, இரத்தினபுரி, காலி, மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை உள்ளிட்ட 13 மாவட்டங்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.

மேற்கு, சப்ரகமுவ, மத்திய, தெற்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களில் இன்று (அக்.14) அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதுடன் சில இடங்களில் மி.மீ. 100க்கு மேல் பலத்த மழை பெய்யக்கூடும் என்றும் ஜெனரல் கூறினார்.

மேலும், தீவின் மற்ற பகுதிகளில் மாலை அல்லது இரவு நேரங்களில் சில இடங்களில் மி.மீ. 75 பாகைக்கு மேல் பலத்த மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதுடன், பேருவளை தொடக்கம் காலி, ஹம்பாந்தோட்டை, பொத்துவில் ஊடாக மட்டக்களப்பு வரையான கரையோரப் பகுதிகளில் காற்றின் வேகம் உடனடியாக மணிக்கு 100 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கலாம். இது சுமார் 60-70 வரை உயரும் சாத்தியம் காணப்படுவதுடன், புத்தளத்திலிருந்து கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகள் உடனடியாக இடியுடன் கூடிய மழையுடன் கொந்தளிப்பாக மாறக்கூடும்.

Related posts

”ஜனாதிபதி புலமைப்பரிசில் 2024/25″ விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன!

சாதாரண தர பரீட்சைக்கான விண்ணப்ப காலம் நீடிப்பு

editor

அடுத்து ஆட்சி அமைக்கும் எந்தவொரு அரசாங்கத்திலும், அமைச்சராக இருப்போம்: மனோ