உள்நாடு

இலங்கையை அல்லக்கையாக்கும் அமைச்சரவை யோசனை

(UTV | கொழும்பு) – இலங்கையை நடுத்தர வருமானம் பெறும் நாடாக இருந்து குறைந்த வருமானம் பெறும் நாடாக மாற்றுவதற்கான யோசனை நேற்று (10) அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

உலக வங்கி மற்றும் சர்வதேச அபிவிருத்தி சங்கத்தின் சலுகை நிதியை பெற்றுக்கொள்ளும் நோக்கில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

இது தொடர்பான விரிவான காரணங்களை அமைச்சரவையில் முன்வைத்த பின்னர், அது குறித்து உலக வங்கிக்கு அறிவிப்பதாகவும் அவர் கூறினார்.

மேலும், 2017ஆம் ஆண்டு இலங்கை நடுத்தர வருமானம் பெறும் நாடாக அறிவிக்கப்பட்டதாகவும், தற்போதைய நிலவரப்படி, அந்த நியமனம் பயனற்றது என்றும் அவர் கூறினார்.

மேலும், மீள்கட்டுமானம் மற்றும் அபிவிருத்திக்கான சர்வதேச வங்கியிடமிருந்து கடன்களை வழங்குவதில் நடுத்தர வருமானம் கொண்ட நாடாக நியமிக்கப்பட்டுள்ளமை குறைந்த வட்டி விகிதத்திற்கு தகுதியற்றதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நடுத்தர வருமானம் பெறும் நாட்டை குறைந்த வருமானம் கொண்ட நாடு என்று பெயரிடுவது நாட்டுக்கு அவமானம் அல்ல என்றும், இது இந்த தருணத்தில் எடுக்க வேண்டிய நிதி நடவடிக்கை என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Related posts

மண்சரிவு அபாயம் : வெளியேற மறுப்போருக்கு எதிராக சட்ட நடவடிக்கை

ரஞ்சனின் சாதாரண தரப் பரீட்சை பெறுபேறு [RESULT ATTACHED]

விரைவில் தீவிர பொருளாதார மந்தநிலை : உலக வங்கி எச்சரிக்கை