உள்நாடு

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழை

(UTV | கொழும்பு) –   நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

ஊவா, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் சில இடங்களில் சுமார் 75 மில்லிமீற்றர் அளவில் பலத்த மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேல் மாகாணம் மற்றும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் கரையோரப் பகுதிகளில் காலை வேளையில் பல தடவைகள் மழை பெய்யும்.

இடியுடன் கூடிய மழையுடன் கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் மக்களுக்கு தெரிவிக்கின்றது.

Related posts

அவசரகால பயன்பாட்டிற்கு சீனாவின் சினோபோர்ம் தடுப்பூசி

இலங்கை விமானப் படைக்கு புதிய பிரதானி நியமனம்

எரிபொருள் விலை சூத்திரம் குறித்த தீர்மானம் நிதி அமைச்சுக்கு