உள்நாடு

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பொருளாதாரம் பற்றிய அறிக்கை

(UTV | கொழும்பு) –   இலங்கையின் பொருளாதார நிலை குறித்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை ஆற்ற ஆரம்பித்துள்ளார்.

கடன் மறுசீரமைப்பை எளிதாக்கும் வகையில் இந்தியா, சீனா மற்றும் ஜப்பான் போன்ற கடன் வழங்கும் நாடுகளுடன் கூடிய விரைவில் ஒப்பந்தம் ஒன்றை மேற்கொள்ள இலங்கை எதிர்பார்ப்பதாக அவர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

கடன் மறுசீரமைப்புச் செயல்பாட்டில் இலங்கைக்கு உதவவும் கடனாளி நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் உச்சிமாநாட்டிற்கு இணைத் தலைமை தாங்கவும் ஜப்பான் ஒப்புக் கொண்டுள்ளது.

இலங்கைக்கு 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கி இணங்கியுள்ளதாகவும் ஜனாதிபதி பாராளுமன்றத்திற்கு அறிவித்தார்.

2023 ஆம் ஆண்டில் அதிகரித்து வரும் எரிபொருளின் விலை அதிகரிப்பு உட்பட உலகளாவிய பணவீக்கத்தின் விளைவுகளை நிராகரிப்பதற்காக ஒரு திட்டத்தை உருவாக்குவது முக்கியம் என்று ஜனாதிபதி விக்கிரமசிங்க கூறினார்.

பொருளாதாரம் வீழ்ச்சியடையும் வரை காத்திராமல் பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்ப அனைவரும் ஒன்றிணைய வேண்டுமென அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

Related posts

மழை பெய்யக் கூடிய சாத்தியம்

ஷானி அபேசேகர தொடர்ந்தும் விளக்கமறியலில்

வெள்ளை வேன் ஊடக சந்திப்பு – ராஜித, ரூமிக்கு அழைப்பாணை