உள்நாடு

நாளை குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு உயிரியல் பூங்காக்கள் இலவசம்

(UTV | கொழும்பு) –   நாளை (01) உலக குழந்தைகள் தினம் மற்றும் உலக முதியோர் தினத்தை முன்னிட்டு அனைத்து உயிரியல் பூங்காக்களிலும் பள்ளி மாணவர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட பெரியவர்கள் இலவசமாக நுழைய தேசிய விலங்கியல் துறை அனுமதி அளித்துள்ளது.

விலங்குகள் குறித்த கல்வி அறிவை குழந்தைகளுக்கு வழங்குவதற்காக உயிரியல் பூங்காக்களில் பல கல்வி நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சகல பூங்காக்களிலும் விலங்குகளுக்கு உணவளிப்பதற்கும், விலங்குகளுடன் புகைப்படம் எடுப்பதற்கும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் சிறுவர்கள் மற்றும் பெரியவர்கள் உல்லாசமாக பொழுதைக் கழிப்பதற்கும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

இராஜினாமா செய்த மோடி: மீண்டும் பிரதமராக 8ஆம் திகதி பதவியேற்பார்

சம்பள உயர்வு அல்லது 20 ஆயிரம்- நாடளாவியரீதியில் போராட்டம்

மேலும் 08 கடற்படை உறுப்பினர்கள் பூரண குணம்