(UTV | கொழும்பு) – புலம்பெயர்ந்தோர் சுகாதாரக் கொள்கையை நிறுவுவதில் அனுபவத்தைப் பெறுவதற்காக 17 பேர் கொண்ட மாலத்தீவு தூதுக்குழு இந்த நாட்டிற்கு வந்துள்ளது.
மாலத்தீவின் சுகாதார அமைச்சர் டாக்டர் ஷா மாஹிரும் இதில் அடங்குவர்.
2013 ஆம் ஆண்டு இலங்கையில் புலம்பெயர்ந்தோர் சுகாதாரக் கொள்கை ஸ்தாபிக்கப்பட்டதுடன், அதனை ஆராய்ந்து மாலைதீவில் புலம்பெயர்ந்தோர் சுகாதாரக் கொள்கையை தயாரிப்பதற்கான அனுபவத்தைப் பெறுவதே அவர்களது விஜயத்தின் நோக்கமாகும்.
சுகாதார அமைச்சர் டொக்டர் கெஹலிய ரம்புக்வெல்ல மற்றும் இந்த தூதுக்குழுவினருக்கு இடையில் கொழும்பில் விசேட செயலமர்வு இடம்பெற்றதாகவும், இதில் இரு நாடுகளுக்குமிடையில் சுகாதாரத் துறையில் அனுபவங்களையும் ஆதரவையும் பரிமாறிக் கொள்வது குறித்து கவனம் செலுத்தப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.