உள்நாடு

மழையுடனான காலநிலை தொடரும்

(UTV | கொழும்பு) –   நாட்டின் தென்மேற்குப் பகுதியில் இன்றும் (30) அடுத்த சில நாட்களிலும் மழையுடனான காலநிலையில் சிறிதளவு அதிகரிப்பை எதிர்பார்க்கலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும்.

வடமேற்கு மாகாணத்தில் சிறிதளவு மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதுடன் ஊவா மாகாணம் மற்றும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

மத்திய மலையகத்தின் மேற்கு சரிவுகளிலும் வடக்கு, வடமத்திய மற்றும் தென் மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழையுடன் கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களைக் கோருகிறது.

Related posts

தனியார் தாங்கி உரிமையாளர்களது பணிப்புறக்கணிப்பிற்கு IOC ஆதரவு

சிவனொளிபாத மலை யாத்திரிக்காலம் நாளை முதல்

வாகனங்களை பதிவு செய்வதற்கு TIN எண் கட்டாயம் – மோட்டார் போக்குவரத்து ஆணையாளர்..!