உள்நாடு

சின்டி மெக்கேன் இன்று நாட்டுக்கு

(UTV | கொழும்பு) – ரோமில் உள்ள ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் பிரதிநிதியான சின்டி மெக்கேன் இன்று (25) நாட்டிற்கு விஜயம் செய்யவுள்ளார்.

எதிர்வரும் 28ஆம் திகதி வரை நாட்டில் தங்கியிருக்கும் அவர், கொழும்பில் உள்ள அரச உயர் அதிகாரிகள் மற்றும் உதவி நிறுவனங்களைச் சந்தித்து கலந்துரையாடவும் திட்டமிட்டுள்ளார்.

அமெரிக்க நிதியத்தால் இயக்கப்படும் மனிதாபிமான உதவித் திட்டங்களின் பயனாளிகள் மற்றும் அவற்றை செயல்படுத்தும் தரப்பினருடன் அவர் விவாதிக்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

சுகாதார வழிமுறைகள் மீறப்பட்டால் பெரும் சிக்கலாகும்

சில மாவட்டங்களில் நாளை தளர்த்தப்படவுள்ள ஊரடங்கு சட்டம்

UNHRC 30/1 தீர்மானத்திலிருந்து விலக அமைச்சரவை அனுமதி