உள்நாடு

பல அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைப்பு

(UTV | கொழும்பு) –  லங்கா சதொச நிறுவனம் 5 அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலைகளை குறைக்க தீர்மானித்துள்ளது.

அதன்படி, நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து லங்கா சதொச விற்பனை நிலையங்களிலும் இந்த பொருட்களை வாடிக்கையாளர்களுக்கு பெற்றுக் கொள்ள முடியும் என அவர்கள் அறிவித்துள்ளனர்.

இந்த விலை குறைப்பு நேற்று (22ம் திகதி) முதல் வரும் 30ம் திகதி வரை அமுலில் இருக்கும்.

இதன்படி, இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ பெரிய வெங்காயம் 25 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.

இதன் முந்தைய விலை ரூ.175, புதிய விலை ரூ.150.

ஒரு கிலோ வெள்ளை சீனி 7 ரூபாவால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 278 ரூபாவாகும்.

முன்னதாக ஒரு கிலோ வெள்ளை சீனி 285 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டது.

185 ரூபாவாக இருந்த இறக்குமதி செய்யப்பட்ட ஒரு கிலோ வெள்ளை அரிசியின் விலை 6 ரூபாவால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 179 ரூபாவாகும்.

இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ நாட்டு அரிசியை 9 ரூபாவால் குறைத்து நுகர்வோருக்கு வழங்க சதொச கூட்டுத்தாபனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

தற்போது இருந்த விலை 194 ரூபாயாகவும், விலை குறைப்புக்கு பின் 185 ரூபாயாகவும் உள்ளது. இறக்குமதி செய்யப்படும் சிவப்பு பருப்பின் விலை கிலோ ஒன்றுக்கு 14 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இருந்த விலை 429 ரூபாயாகவும், புதிய விலை 415 ரூபாயாகவும் இருந்தது.

Related posts

ஆணுறுப்பை வட்ஸ்ப் ஊடாக அனுப்பிய சமூர்த்தி உத்தியோகத்தர் அதிரடியாக கைது- சாய்ந்தமருதுவில் சம்பவம்

போலி அடையாள அட்டை தயாரித்த இருவர் கைது

கொழும்பு – மருதானை பிரதேசத்தில் சுமார் 2000 பேர் தனிமைப்படுத்தலுக்கு