உள்நாடு

அமைச்சர்களின் வெளிநாட்டுப் பயணங்களை மட்டுப்படுத்த அரசு தீர்மானம்

(UTV | கொழும்பு) – அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களின் வெளிநாட்டு பயணங்களை அத்தியாவசியப் பணிகளுக்காக மாத்திரம் மட்டுப்படுத்துவதற்கு ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

தற்போது நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடியை கருத்திற் கொண்டு அரச செலவீனங்களைக் குறைக்கும் நோக்கில் ஜனாதிபதியினால் இந்த யோசனை முன்வைக்கப்பட்டதாக அமைச்சரவை ஊடக பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

அவ்வாறான சுற்றுப்பயணங்களுக்கு அவசியமான அலுவலர் அல்லது குறித்த சுற்றுப்பயணக் கடமைகளுக்கு அத்தியாவசியமான ஒருசிலரை மாத்திரம் பங்கேற்கச் செய்தல் வேண்டுமென ஜனாதிபதியின் குறித்த யோசனையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான அறிவிப்பு

மழையுடன் கூடிய வானிலை – 2 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை.

இன்று முதல் 3 மணி நேரம் மின்வெட்டு