(UTV | பீஜிங்) – சர்வதேச அளவில் பெரும் கவனத்தைப் பெற்ற சீனாவின் ஆராய்ச்சிக் கப்பல் Yuan Wang 5, நேற்றைய தினம் (20) மீண்டும் சீனாவின் ஜியாங்சு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
இந்தக் கப்பல் கடந்த மாதம் இலங்கைக்கு வந்து சர்வதேசத்தின் கவனத்தை ஈர்த்த செய்தியாக மாறியது.
69 நாள் பயணத்திற்குப் பிறகு யுவான் வான் 5 என்ற கப்பல் அதன் சொந்த துறைமுகமான ஜியாங்சுவை வந்தடைந்துள்ளது.
கப்பல் சுமார் 14000 கடல் மைல் தூரம் பயணித்துள்ளது.