உலகம்

ராணியின் கிரீடத்தில் உள்ள வைரத்தை ஆப்பிரிக்கா கோருகிறது

(UTV | ஆப்பிரிக்கா) – இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்குகள் முடிவடைந்த நிலையில், ராணியின் கிரீடத்தில் பொருத்தப்பட்டிருந்த வைரத்தை தென்னாப்பிரிக்காவிற்கு திருப்பித் தருமாறு பிரித்தானிய அரச குடும்பத்திடம் தேசபக்தி அமைப்பு ஒன்று கூறியுள்ளது.

‘கிரேட் ஸ்டார் ஆஃப் ஆப்ரிக்கா’ அல்லது ‘குல்லினன் 1’ என்று அழைக்கப்படும் இந்த வைரமானது தென்னாப்பிரிக்காவில் 1905ல் கண்டுபிடிக்கப்பட்டது.

இது தென்னாப்பிரிக்காவில் கிடைத்த மிகப்பெரிய வைரம் மட்டுமல்ல, மிகவும் மதிப்புமிக்க வைரமும் கூட. காலனித்துவ காலத்தில், காலனித்துவ ஆட்சியாளர்கள் இந்த வைரத்தை பிரிட்டிஷ் அரச குடும்பத்திற்கு நன்கொடையாக வழங்கினர்.அதன்படி, கிரீடத்தில் வைரம் இணைக்கப்பட்டது.

தென்னாப்பிரிக்க தேசபக்தி ஆர்வலர்கள் குறிப்பிடுவது போல, ராணியின் மரணத்திற்குப் பிறகு, அவர்கள் ‘குல்லினன் 1’ வைரத்தை மட்டுமல்ல, தென்னாப்பிரிக்காவில் கிடைத்த மற்ற வைரங்களையும் திரும்பப் பெற விரும்புகிறார்கள்.

தென்னாப்பிரிக்காவில் இருந்து வெள்ளை ஆட்சியாளர்கள் வைரங்களை கொள்ளையடித்ததாக தேசபக்தி ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

Related posts

அமெரிக்காவில் இலட்சத்தை நெருங்கும் கொரோனா உயிரிழப்பு

உக்ரைன் மீது தொடர் தாக்குதலால் ரஷியாவுக்கு கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்க ஜி-7 நாடுகள் ஆலோசனை

அரச குடும்ப பொறுப்பிலிருந்து விலகும் இளவரசர் ஹரி