உள்நாடு

பாராளுமன்ற மாத மின் கட்டணம், சுமார் 60 லட்சம்

(UTV | கொழும்பு) –   பாராளுமன்றத்தின் மாதாந்த மின் கட்டணம் 60 இலட்சம் ரூபாவை அண்மித்துள்ளதாக இன்று தெரியவந்துள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் மான்னப்பெரும மற்றும் மின்சக்தி எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர ஆகியோருக்கு இடையில் பாராளுமன்றத்தில் இடம்பெற்ற கேள்வி பதில் அமர்வின் போதே இந்த விடயம் தெரியவந்துள்ளது.

இங்கு பாராளுமன்றத்தின் மாதாந்த மின்சாரக் கட்டணம் 60 இலட்சம் எனவும், அதனைக் குறைக்கும் வகையில் சூரிய மின்கலங்கள் மூலம் மின்சாரம் பெறும் முறை தயாரிக்கப்பட வேண்டுமெனவும் அஜித் மன்னப்பெரும குறிப்பிட்டார்.

அதற்குப் பதிலளித்த அமைச்சர் காஞ்சன விஜேசேகர, பாராளுமன்றத்தில் 60 இலட்சம் ரூபா மின்சாரக் கட்டணத்தை செலுத்துவதற்குப் பதிலாக சூரிய ஒளி மின்சார அமைப்பை ஏற்படுத்துவதே முக்கியம் எனத் தெரிவித்திருந்தார்.

எவ்வாறாயினும், அதற்கான பணத்தை தமது அமைச்சு வழங்க முடியாது எனவும், தேவைப்பட்டால் தொழில்நுட்ப ஆதரவை வழங்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவருக்குப் பிணை!

இலங்கையில் வளிமாசு அதிகரிப்பு

சூழல் நேயமிக்க பல வேலைத் திட்டங்களை இன்று முதல் அமுலுக்கு