உள்நாடு

இரண்டு பதில் அமைச்சர்களை நியமனம்

(UTV | கொழும்பு) – ஜனாதிபதி இரண்டு பதில் அமைச்சர்களை நியமித்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர்களான ரஞ்சித் சியம்பலாபிட்டிய நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகளுக்கான பதில் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சராக திலும் அமுனுகம நியமிக்கப்பட்டுள்ளார்.

இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி பிரித்தானியாவுக்குச் சென்றதையடுத்து இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இதன்படி, ஜனாதிபதி உரிய விஜயத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பும் வரை இந்த நியமனம் செல்லுபடியாகும்.

நிதி இராஜாங்க அமைச்சராக ரஞ்சித் சியம்பலாபிட்டியவும், முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சராக திலும் அமுனுகமவும் பதவி வகிக்கின்றனர்.

Related posts

சற்று முன்னர்- மேலும் 609 பேருக்கு கொரோனா

கொரோனா வைரஸ் – விசேட கூட்டம் ஆரம்பம்

இராஜாங்கணை தபால் மூல வாக்கெடுப்பு ஒத்திவைப்பு