உலகம்

குரங்கு காய்ச்சலின் முதல் பதிவு சீனாவில் பதிவு

(UTV | சீனா) – குரங்கு காய்ச்சலின் முதல் பதிவு சீனாவில் பதிவாகியுள்ளது.

சோங்கிங் நகரில் நேற்று பதிவாகிய இந்த நோய்த்தொற்று நபர் வெளிநாட்டிலிருந்து வந்தவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர் சீனாவிற்கு வந்தடைந்த போது அவருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டதன் காரணமாக வைரஸ் பரவுவதற்கான சாத்தியக்கூறுகள் குறைக்கப்பட்டுள்ளதாக சீன அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

குரங்கு அல்லது குரங்கு காய்ச்சல் முதன்முதலில் ஆப்பிரிக்க பிராந்தியத்தில் இருந்து பதிவாகியுள்ளது, தற்போது உலகம் முழுவதும் 61,000 க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Related posts

சவுதியில் திறக்கப்பட்ட மதுபானக்கடை!

நினைவுச் சின்னம் எதற்கு என்றும் நினைவா சின்னமாக ‘கொரோனா’

தமிழ்நாட்டில் ஆகஸ்ட் 31 வரை ஊரடங்கு நீடிப்பு