உள்நாடு

வெளிவிவகார அமைச்சின் தூதுரக சேவைப் பிரிவின் கணினிக் கட்டமைப்பில் கோளாறு

(UTV | கொழும்பு) – வெளிவிவகார அமைச்சின் தூதுரக சேவைப் பிரிவின் கணினிக் கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள கோளாறு காரணமாக, சரிபார்ப்பு மற்றும் சான்றளிப்பு பிரிவுகளின் சேவைகள் மறு அறிவித்தல்வரை இடைநிறுத்தப்பட்டுள்ளன.

வெளிவிவகார அமைச்சு அறிக்கை ஒன்றின் மூலம் இதனை அறிவித்துள்ளது.

இதற்கமைய, கொழும்பு 01 இல் உள்ள வெளிவிவகார அமைச்சின் தூதுரக சேவைப் பிரிவிலும், யாழ்ப்பாணம், திருகோணமலை, கண்டி, மாத்தறை மற்றும் குருநாகல் முதலான பிராந்திய அலுவலகங்களிலும் சரிபார்ப்பு மறறும் சான்றளிப்பு பிரிவுகளின் சேவைகள் மறு அறிவித்தல்வரை இடைநிறுத்தப்பட்டுள்ளன.

கணினிக் கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள கோளாறை சீராக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதுடன், குறித்த சேவைகள் மீள ஆரமப்பிக்கப்பட்டதும் பொதுமக்களுக்கு அறியப்படுத்தப்படும்.

எவ்வாறிருப்பினும், ஏனைய தூதரக சேவைகள் எவ்வித தடையுமின்றி இடம்பெறும் என வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

அதேநேரம், ஏனைய சேவை பெறுநர்கள், தங்களின் சேவைகளின் சாத்தியக்கூறுகள் குறித்து அறிந்துகொள்ள தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

கொழும்பு தூதுரக சேவைப் பிரிவு 0112 33 88 12 அல்லது 0112 33 88 43
யாழ்ப்பாணம் பிராந்திய அலுவலகம் – 021 22 15 970
திருகோணமலை பிராநதிய அலுவலகம் – 026 22 23 182
கண்டி பிராந்திய அலுவலகம் – 0812 38 44 10
குருநாகல் பிராந்திய அலுவலகம் – 0372 22 59 41

Related posts

சவுக்கு மரங்களை வெட்டிய குற்றத்தில் மூவர் கைது

தேர்தல் குறித்த இறுதி தீர்மானம் மே மாதம் 14 இதற்குப் பிறகு

மீண்டோரின் எண்ணிக்கை 3,000 ஐ கடந்தது