உள்நாடு

திங்கட்கிழமை, அரச நிறுவனங்களுக்கு விசேட விடுமுறை

(UTV | கொழும்பு)  –  மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதிச் சடங்கை முன்னிட்டு, இலங்கையில் செப்டம்பர் 19ஆம் திகதி திங்கட்கிழமை துக்க தினமாக பிரகடனப்படுத்தப்பட்டு அனைத்து அரச நிறுவனங்களுக்கும் விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

ராணியின் இறுதிச் சடங்கு லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் திங்கள்கிழமை நடைபெறுகிறது.

70 ஆண்டுகள் ஆட்சி செய்த ராணி இரண்டாம் எலிசபெத் தனது 96வது வயதில் பால்மோரலில் வியாழக்கிழமை காலமானார்.

அவர் 1952 மற்றும் 1972 க்கு இடையில் இலங்கையின் அரச தலைவராக இருந்தார்.

இதேவேளை, மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் மறைவை முன்னிட்டு எதிர்வரும் செப்டம்பர் 19ஆம் திகதியை துக்க தினமாக பிரகடனப்படுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

மறைந்த இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஐக்கிய இராச்சியம் செல்லவுள்ளார்.

Related posts

ஃபிட்ச் ரேட்டிங் இலங்கையின் கடன் மீள் செலுத்துகை தரநிலையை மேலும் குறைத்துள்ளது

சீனியின் தாக்கம் : கேக் கிலோவின் விலை 150 ரூபாவால் அதிகரிப்பு

முக்கியமான நாடாளுமன்ற அமர்வு – இப்போது நேரலையில் பார்க்கவும்