உள்நாடு

ராணியின் மறைவுக்கு, உயர்ஸ்தானிகராலயத்தில் இரங்கல் புத்தகத்தில் ஜனாதிபதி கையெழுத்திட்டார்

(UTV | கொழும்பு) – ஐக்கிய இராச்சியத்தில் மறைந்த இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கலந்துகொள்ளவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மறைவுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இரங்கல் தெரிவித்துள்ளார்.

பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்திற்கு வருகை தந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சாரா ஹல்டனை சந்தித்து, மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் மறைவு குறித்து அனுதாபம் தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை பிரித்தானிய உயர்ஸ்தானிகர் வரவேற்றார். பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்தில் வைக்கப்பட்டுள்ள விசேட அனுதாபப் புத்தகத்தில் ஜனாதிபதி அவர்கள் இரங்கல் குறிப்பை வெளியிட்டதுடன், ஏழு தசாப்தங்களாக உலகெங்கிலும் உள்ள மக்களுக்கு அவர் ஆற்றிய சிறந்த சேவைகளைப் பாராட்டினார்.

செப்டம்பர் 19 ஆம் திகதி லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் நடைபெறவுள்ள இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கில் ஜனாதிபதி பங்கேற்க உள்ளார்.

 

Related posts

இறக்குமதி செய்யப்படும் சில பொருட்களுக்கு வரி திருத்தம்

பதினேழு துறைசார் கண்காணிப்புக் குழுக்கள்

உயிர்த ஞாயிறு: நாடுமுழுவதும் விசேட பாதுகாப்பு