உள்நாடு

ராணியின் இறுதிச் சடங்கில் இலங்கை ஜனாதிபதியும் கலந்து கொள்வார்

(UTV | கொழும்பு) –  மறைந்த இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிக் கிரியைகளில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் 17ஆம் திகதி பிரித்தானியா செல்லவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

ராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதிச் சடங்குகள் வரும் 19ஆம் திகதி கிரேட் பிரிட்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் பேராலயத்தில் நடைபெறவுள்ளது.

இதேவேளை, இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மறைவுக்காக பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்தில் வைக்கப்பட்டுள்ள இரங்கல் குறிப்பேட்டில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் குறிப்பொன்றை விடுத்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

பிரித்தானிய மகாராணியின் மறைவுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பிரித்தானிய அரச குடும்பம், அரசாங்கம் மற்றும் மக்களுக்கு தனது அனுதாபங்களைத் தெரிவித்துள்ளார்.

Related posts

மீண்டும் பால்மா விலையை அதிகரிக்க கோரிக்கை

அதிபர் – ஆசிரியர்களுக்கு மாதாந்தம் ரூ.5000 மேலதிக கொடுப்பனவு

அஜித் டோவால் இலங்கை வந்தடைந்தார்