உள்நாடு

முஜிபுர், காவிந்தவுடன் சட்டத்தரணி எரந்த ஜெனீவாவுக்கு

(UTV | கொழும்பு) – ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான முஜிபுர் ரஹ்மான், கலாநிதி காவிந்த ஜயவர்தன மற்றும் சட்டத்தரணி எரந்த வெலியங்கே ஆகியோர் ஜெனீவா சென்றுள்ளனர்.

இவர்கள் நாளை (12) ஆரம்பமாகவுள்ள ஜெனிவா மனித உரிமைகள் பேரவையின் 51 ஆவது அமர்வில் பங்கேற்கவுள்ளனர்.

வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி மற்றும் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ ஆகியோர் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் தலைவர் பெடரிகோ வில்லேகாஸை சந்தித்துள்ளனர்.

மனித உரிமைகளை பாதுகாக்கும் நடவடிக்கையில் இலங்கை தொடர்ந்து ஈடுபடும் என்றும் தற்போதைய நெருக்கடிகளை சமாளிக்க ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையுடன் கைகோர்க்கும் என்றும் அங்கு உறுதி அளித்துள்ளனர்.

இதற்கிடையில், அமைச்சர்களான அலி சப்ரி மற்றும் விஜயதாச ராஜபக்ஷ ஆகியோர் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான பதில் உயர்ஸ்தானிகர் திருமதி நடா நஷீப்பை சந்தித்துள்ளனர்.

மனித உரிமைகளை பாதுகாக்கும் நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபடுவதற்கு தாங்கள் உறுதி பூண்டுள்ளதாக அங்கு அவர்கள் உறுதியளித்துள்ளனர்.

Related posts

அரச ஊழியர்களுக்கு விசேட விடுமுறை

எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் 3,000 கோழி குஞ்சுகள் தீக்கிரை

டயனா மோதல் விவகாரம் தொடர்பில் இன்று கூடும் விசாரணைக் குழு!