உள்நாடு

இம்முறை 75ஆவது சுதந்திர தினம் குறைந்த செலவில்

(UTV | கொழும்பு) –  75ஆவது சுதந்திர தினத்தை குறைந்த செலவில், ஆனால் பெருமையுடன் கொண்டாடுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

75வது சுதந்திர தின நினைவேந்தல் குழுவின் முதலாவது கூட்டம் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற போதே ஜனாதிபதி இந்த பணிப்புரையை வழங்கினார்.

75 ஆவது தேசிய சுதந்திர தின விழா பெப்ரவரி 04 ஆம் திகதி மாலை கொழும்பு காலிமுகத்திடல் பல்வேறு கலாசார கூறுகளை உள்ளடக்கிய வண்ணமயமான முறையில் நடைபெற உள்ளது.

ஆயுதப் படைகள் மற்றும் பொலிஸாரின் அணிவகுப்பு மற்றும் விழாக்களுக்கு மேலதிகமாக, இலங்கையின் பெருமையை பிரதிபலிக்கும் கலாச்சார கூறுகள் மற்றும் இளைஞர்களுக்கு ஏற்ற கலைக் கூறுகள் சுதந்திர விழாவில் உள்ளடக்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

சர்வதேச ஒத்துழைப்பை மேம்படுத்தும் நோக்கில் சார்க் நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களை சுதந்திர இயக்கத்தின் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கவும் முடிவு செய்யப்பட்டது.

75 ஆவது சுதந்திர தினத்துடன் இணைந்து அனைத்து மாகாணங்களையும் முன்முயற்சியாகக் கொண்டு பல்வேறு கருப்பொருள்களின் கீழ் கண்காட்சிகளை நடாத்துவதற்கும், தௌந்தரதுடுவை மற்றும் பெதுருதுடுவவை இணைக்கும் துவிச்சக்கர வண்டி சவாரி ஏற்பாடு செய்வதற்கும் ஜனாதிபதி முன்மொழிந்தார்.

75வது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு 75வது தேசிய முத்திரை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் செயலாளர் தலைமையில் பிரதமர் தினேஷ் குணவர்தனவின் மேற்பார்வையின் கீழ் சுதந்திர தின நிகழ்வுகளை ஏற்பாடு செய்வதற்கு உரிய உப குழுக்களை நியமிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேலும் பணிப்புரை விடுத்துள்ளார்.

Related posts

20 நாள் சிசுவின் ஜனாஸா எரிப்பு : மார்ச்சில் விசாரணை

மழையுடனான வானிலை மேலும் தொடரும்

தொடர்ந்தும் மழையுடனான காலநிலை