(UTV | கொழும்பு) – இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மறைவுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதன்படி அனைத்து அரச நிறுவனங்களிலும் தேசியக் கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிடுமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.
ராணியின் மறைவுக்கு தேசிய துக்கம் அனுசரிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.