கேளிக்கை

விஜய்யுடன் இணையும் கீர்த்தி

(UTV |  சென்னை) – விஜய் தற்போது வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இதில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார்.

இந்த படத்துக்கு பிறகு விஜய் நடிக்கும் 67-வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க இருக்கிறார். ஏற்கனவே மாஸ்டர் படம் இவர்கள் கூட்டணியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து சமீபத்தில் வெளியான விக்ரம் படம் வசூல் சாதனை நிகழ்த்தியதால் விஜய்யின் 67-வது படத்துக்கும் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.

இப்படத்தில் விஜய்க்கு 50 வயது தாதா கதாபாத்திரம் என்றும் அவருக்கு வில்லன்களாக 6 முன்னணி நடிகர்கள் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த படத்தை தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னட, மலையாள மொழிகளில் எடுக்க இருப்பதால் ஒவ்வொரு மொழியில் இருந்து ஒரு வில்லன் நடிகர்களை தேர்வு செய்ய படக்குழு திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது. இந்தி நடிகர் சஞ்சய்தத், மலையாள நடிகர் பிருதிவிராஜ், தமிழ் நடிகர் அர்ஜுன் ஆகியோர் இந்த பரிசீலனையில் உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக திரிஷா நடிக்க வாய்ப்பு உள்ளதாகவும் இன்னொரு நாயகியாக சமந்தா பெயர் அடிபடுகிறது என்றும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் மற்றொரு நடிகையாக இந்த படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கு முன்பு சர்க்கார், பைரவா போன்ற படங்களில் விஜய்யுடன் கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார். விஜய்யுடன் மீண்டும் கீர்த்தி சுரேஷ் இணையவுள்ளதால் ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related posts

இளையராஜாவுக்கு பத்ம விபூஷண் விருது…

400 மில்லியன் பார்வையாளர்களை நெருங்கும் ” ROWDY BABY”

கைதாவாரா செளந்தர்யா ரஜினிகாந்த்?