உள்நாடு

தடை செய்யப்பட்ட 6 முஸ்லிம் அமைப்புகளின் மீதான தடை நீக்கம்

(UTV | கொழும்பு) – தடை செய்யப்பட்ட 11 முஸ்லிம் அமைப்புகளில் 6 அமைப்புகளின் மீதான தடையை நீக்க அரசு முடிவு செய்துள்ளது.

திகாமடுல்ல மாவட்ட சபை உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ் மற்றும் அநுராதபுரம் மாவட்ட சபை உறுப்பினர் இஷாக் ரஹ்மான் ஆகியோர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்து இது தொடர்பான தகவல்களை முன்வைத்ததன் பின்னர், நேற்று (24) ஜனாதிபதி அலுவலக மற்றும் பாதுகாப்புப் பிரிவின் பிரதானி சாகல ரத்நாயக்க தலைமையில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இந்த கலந்துரையாடலில் தடையை நீக்கிய முஸ்லிம் அமைப்புகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

இருமடங்காக அதிகரிக்க போகும் எரிபொருள் ஒதுக்கீடு!

திங்கள் முதல் 5,000 பஸ்கள், 400 ரயில்கள் சேவையில்

பெண் வைத்தியரை புகைப்படம் எடுத்த வைத்தியருக்கு விளக்கமறியல்