உள்நாடுவணிகம்

பாண், பனிஸ் விலைகள் குறையும் சாத்தியம்

(UTV | கொழும்பு) – பாண் ஒன்றுக்கான விலையை 50 ரூபாவாலும், பனிஸ் ஒன்றின் விலையை 25 ரூபாவாலும் குறைக்க முடியும் என அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

வெதுப்பக தொழிற்துறையை தற்போது கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், கோதுமை மா உள்ளிட்ட மூலப்பொருட்களின் பாரிய விலை அதிகரிப்பு காரணமாக வெதுப்பக உற்பத்திகளின் விலை பாரியளவில் அதிகரித்துள்ளது என இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் மற்றும் அதனுடைய நிறுவனங்கள் உதவி வழங்குமாயின் வெதுப்பக உற்பத்தி பொருட்களின் விலையினை குறைக்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

நாட்டில் வினோதமான அரசாங்கமே காணப்படுகிறது.

இருபது வயதுக்கு மேற்பட்டோருக்கு ஃபைசர்

கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 87 ஆக உயர்வு