உள்நாடு

பொல்கஹவெல – கொழும்பு கோட்டை வரையான தினசரி அலுவலக புகையிரத சேவை இடைநிறுத்தம்

(UTV | கொழும்பு)  – புகையிரத சாரதிகளுக்கு தூங்கும் அறை பிரச்சினை காரணமாக பொல்கஹவெலயிலிருந்து கொழும்பு கோட்டை வரையான தினசரி அலுவலக புகையிரதம் நேற்று(17) முதல் ஒரு வார காலத்திற்கு இடைநிறுத்தப்பட்டுள்ளது.

பொல்கஹவெல ரயில் நிலையத்தில் உள்ள சாரதிகளின் படுக்கையறைகளில் இல.528 பொல்கஹவெல – கொழும்பு புகையிரதத்தின் சாரதியின் படுக்கையறை உள்ளதுடன் அந்த அறையில் கண்டி – பொல்கஹவெல புகையிரதத்தின் சாரதியினை உறங்குவதற்கு அனுமதி வழங்கியமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இலக்கம் 528 புகையிரதத்தின் சாரதிகள் தனது சேவையில் இருந்து விலகியுள்ளதாக ரயில் நிலைய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

Related posts

பொலிஸ் சிரேஷ்ட அதிகாரிகள் 8 பேருக்கு இடமாற்றம்

சவூதியில் வாழும் இலங்கையர்களுக்கு முக்கிய அறிவிப்பு

இனவாதிகளால் கொல்லப்பட்ட பெளசுல் அமீன் குடும்பத்திற்கு வீடு!