உள்நாடு

குழுக்கள் பலவற்றின் தலைமை எதிர்க்கட்சிக்கு

(UTV | கொழும்பு) – முன்னிலை முக்கிய பல குழுக்களின் தலைமை பதவிகளை எதிர்க்கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்திக்கு கிடைப்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுவதாகவும், இது மிகவும் சாதகமான நிலைமை எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

இதன் பிரகாரம், சம்பந்தப்பட்ட அனைத்து குழுக்களின் தலைவர் பதவியையும் எதிர்க்கட்சிக்கு வழங்குவதற்கு ஏற்பாடு செய்யுமாறு அரசாங்கத்திற்கு முன்மொழிவதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், நாட்டை கட்டியெழுப்புவதற்கும், நாட்டுக்கு சேவை செய்வதற்கும் அமைச்சுப் பதவிகள் அவசியமில்லை எனவும் அவர் தெரிவித்தார். மாறாக, நேர்மறையான பணிகளை மேற்கொள்ள குழுக்களை படிகளாக பயன்படுத்துவதாகவும் தெரிவித்தார்.

இலங்கை தற்போது எதிர்நோக்கி வரும் மிக மோசமான நெருக்கடிகளுக்கு தீர்வு காணும் நோக்கில், நவீன இலங்கையை உருவாக்க, பொதுமக்கள் கோரி நிற்கும் சமூக மாற்றத்திற்காக உடன்பாட்டை எட்டுவதற்கு மறுசீரமைப்புகளுக்கான தேசிய வேலைத்திட்டம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளதோடு, அதனோடினைந்ததாக இன்று (15) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையில் கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் கல்விச் சீர்திருத்தங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

அரசியல்வாதிகள், மக்களுக்கான புத்திஜீவிகள் மன்றம், தேசிய அறிஞர்கள் பேரவை உட்பட கல்வியாளர்கள், பல்கலைக்கழக பேராசிரியர்கள்,
விரிவுரையாளர்கள், தொழில் வல்லுநர்கள் என பல்வேறு தரப்பினர் இதில் கலந்து கொண்டிருந்தனர். இந்தப் பணியுடன் இணைக்கப்பட்டதான மறுசீரமைப்புகளுக்கான தலைமை செயலகம் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் திறக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

Related posts

வர்த்தக நிறுவனங்களின் தகவல் பெறும் கால எல்லை நீடிப்பு

வாக்களிப்பு நிலையத்தில் புகைப்படம் எடுத்த வாக்காளர் கைது

மேலும் 2 பேர் பூரணமாக குணமடைந்தனர்