உள்நாடு

உள்ளூர் மதுபானங்களுக்கு புதிய செயலி

(UTV | கொழும்பு) –  சரியான தரம் வாய்ந்த உள்ளூர் மதுபானங்களை அடையாளம் காணும் வகையில், அடுத்த பதினைந்து நாட்களில் நுகர்வோருக்கு சிறப்பு கணினி பயன்பாடு (APP) அறிமுகப்படுத்தப்படும் என்று கலால் ஆணையாளர் நாயகம் எம். ஜே குணசிறி தெரிவித்தார்.

கணினி பயன்பாடு முன்னர் அறிமுகப்படுத்தப்படவிருந்ததாகவும், ஆனால் தொழில்நுட்ப கோளாறு காரணமாக அது தாமதமாகியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த கணினி செயலியை மதுபான போத்தல்களில் ஒட்டப்பட்டுள்ள ஸ்டிக்கர் மூலம் நுகர்வோர் அதனை உற்பத்தி செய்த உற்பத்தியாளரிடம் இருந்து அனைத்து விபரங்களையும் அறிந்து கொள்ள முடியும் என தெரிவித்த ஆணையாளர் நாயகம், போலி மதுபான உற்பத்திகளை தடுப்பதே இதன் முக்கிய நோக்கமாகும் என்றார்.

இறக்குமதி செய்யப்படும் வெளிநாட்டு மதுபானங்களுக்கு ஏற்கனவே இந்த கணினி பயன்பாடு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் குணசிறி தெரிவித்தார்.

உள்ளூர் மதுபானங்களுக்கான ஸ்டிக்கர்களை வெளியிடும் நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளதாக கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related posts

பாராளுமன்றத் தேர்தலை பிற்போட ஒருபோதும் நாம் இடமளிக்கப் போவதில்லை – எதிர்க்கட்சி எச்சரிக்கை.

செரண்டிப் நிறுவனமும் கோதுமை மாவின் விலையை அதிகரித்தது

பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் கைது