உள்நாடு

நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் கோளாறு

(UTV | கொழும்பு) – நுரைச்சோலை அனல்மின் நிலையத்தின் முதலாவது அலகில் கோளாறு ஏற்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இதன்படி தற்போது தொழில்நுட்ப பணியாளர்கள் குறையை கண்டறியும் பணியில் ஈடுபட்டு வருவதாகவும், 2வது அலகு திட்டமிட்ட பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு வருவதாகவும் அமைச்சர் டுவிட்டர் செய்தியில் தெரிவித்துள்ளார்.

நுரைச்சோலை ஆலையின் மூன்றாவது அலகு இயங்குவதாகவும், விநியோகத்தை நிர்வகிக்க மேற்கு ஆலை மற்றும் பிற ஆலைகள் பயன்படுத்தப்படுவதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

பங்கு சந்தை பரிவர்த்தனை நடவடிக்கைகள் உயர்வு

முகக்கவசம் அணியாதவர்கள் நாளை முதல் சுயதனிமைப்படுத்தல்

மதவாதம் பேசிய தேரர் அதிரடியாக கைது!