உள்நாடுவணிகம்

ஒவ்வொரு மாதமும் 5ம் திகதி சமையல் எரிவாயு விலையில் திருத்தம்

(UTV | கொழும்பு) – உள்நாட்டு எரிவாயுவிற்கான செலவு அடிப்படையிலான விலைச் சூத்திரத்தை நடைமுறைப்படுத்துவதற்கான முன்மொழிவுக்கு அமைச்சரவை இணக்கம் வெளியிட்டுள்ளதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி விலை சூத்திரம் ஒவ்வொரு மாதமும் 5 ஆம் திகதி புதுப்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நிதி, பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் இந்த பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டது.

உள்நாட்டு எரிவாயு தடையின்றி வழங்கப்படுவதை உறுதி செய்யும் நோக்கத்துடன் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

Related posts

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் அறிக்கை

படகு மூலம் ஆஸி செல்ல முயன்ற 47 பேர் கடற்படையினரால் கைது

ஹட்டனில் மத போதகர் உட்பட 9 பேர் தேவாலயத்துக்குள்ளே தனிமைப்படுத்தல்